Posts

மார்ச் . 2024, பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் வெளியீடு

Image
மார்ச் . 2024, பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் வெளியீடு. மார்ச் . 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு  பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்களடங்கிய பட்டியலில் மாணவர்களின் பெயர் சேர்த்தல் ( By Transfer ) / நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 03.11.2023 பிற்பகல் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது . அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மார்ச் - 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலினை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 03.01.2024 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge.tn.gov.in -க்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

TRB - BT,/ BRTE Exam Hall Ticket Publishedஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .03 / 2023 , நாள் 25.10.2023 ன்படி 2023-2024ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு எதிர்வரும் 07.01.2024 அன்று நடத்தப்பட உள்ளது

Image
TRB - BT,/ BRTE Exam Hall Ticket Published ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .03 / 2023 , நாள் 25.10.2023 ன்படி 2023-2024ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு எதிர்வரும் 07.01.2024 அன்று நடத்தப்பட உள்ளது .  இத்தேர்வினை எழுத 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர் , விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://www.trb.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் 22 : 12.2023 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

BBC micro:bit. Global learning online 🌍

Image
  Read about the amazing impact educators are having with the BBC micro:bit.  Global learning online